Published : 08 Jan 2024 06:02 AM
Last Updated : 08 Jan 2024 06:02 AM

மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்குவதில்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

சென்னை: மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ எனும் யாத்திரை சென்னை கொளத்தூரை அடுத்த லட்சுமிபுரம் பகுதி மற்றும் பெரம்பூர் பெரவள்ளூர் ஆகிய பகுதிகளில்நேற்று நடைபெற்றது. இதில் மத்திய தொழில், வர்த்தகம்,உணவு, நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல்சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பிரதமரின் பல்வேறு திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கினார்.

மேலும், மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்களிடம், அவர்கள் வர்த்தக செயல்பாடுகள் குறித்தும், கடன் வழங்கிய வங்கிபணியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் மத்திய அமைச்சர் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பேசியதாவது: கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் மிக சிறந்த மாநிலமாக தமிழ்நாடுதிகழ்கிறது. தமிழ் இலக்கியங்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்கிறது.மகாகவி பாரதியார் தனது எழுத்துமற்றும் பாடல்கள் மூலம் நாட்டின்பெருமையை உலகுக்கு எடுத்துரைத்தார்.

சர்.சி.வி.ராமன் போன்றமிகச்சிறந்த அறிவியல் அறிஞர்களை தமிழ்நாடு உருவாக்கி உள்ளது. நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் யாத்திரை,மத்திய அரசின் திட்டங்கள் யாருக்கெல்லாம் கிடைக்காமல் இருக்கிறதோ அவர்களை சென்றடையவேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கும் ஆயுஷ்மான் பாரத் உட்பட பல்வேறு மக்கள் நல திட்டங்களின் பலன்கள், தமிழகத்துக்கு முழுமையாக சென்று சேருவது கிடையாது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மாநில அரசுஒத்துழைப்பு வழங்குவது இல்லை. எனவே, மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள், மத்தியஅரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். நிதியுதவி தொடர்பானதிட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில், இந்தியன் வங்கி செயல் இயக்குநர் மகேஷ்குமார் பஜாஜ், இந்தியன் ஓவர்சீஸ்வங்கியின் செயல் இயக்குநர் ஸ்ரீமதி,சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமைஇயக்குநர் மா.அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x