அஞ்சல் வழியில் குரூப்-1 முதன்மை மாதிரி தேர்வு

அஞ்சல் வழியில் குரூப்-1 முதன்மை மாதிரி தேர்வு

Published on

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு உயர் பணிகளுக்கான புதிய குரூப்-1 அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் மார்ச் மாதம் வெளியிட உள்ளது.

சவால் மிகுந்த இந்த பட்டப் படிப்புத்தரத்திலான குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கு சுயமாகப் படித்து வரும் கிராமப்புற தேர்வர்கள், முதல் முறையாகப் படிப்பவர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் டிஎன்பிஎஸ்சி டிராக் பயிற்சி நிறுவனம் ஜனவரி முதலாவது வாரம் தொடங்கி மார்ச் கடைசி வாரம் வரைபுதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் மாதிரி தேர்வுகளை நடத்தவுள்ளது.

இந்த மாதிரி தேர்வுகள் அனைத்தும் அஞ்சல் வழியில் நடைபெறுவதால் தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்கலாம். கடந்த முறை இந்த வகை மாதிரி தேர்வுகளைத் தொடர்ந்து எழுதி பயிற்சி எடுத்தவர்களில் 3 பேர் தற்பொழுது குரூப்-1 பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு 9003490650 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in