Published : 07 Jan 2024 04:00 AM
Last Updated : 07 Jan 2024 04:00 AM

திவ்ய கலா சக்தி திறன் கண்டறிதல் நிகழ்ச்சி: 75+ மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பு

பெங்களூருவில் நடைபெற்ற ‘திவ்ய கலா சக்தி- மாற்றுத் திறனாளி களின் திறன்களைக் கண்டறிதல்’ என்ற தனித்துவமான நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள்.

முட்டுக்காடு: பெங்களூருவில் நடைபெற்ற ‘திவ்யகலா சக்தி - மாற்றுத் திறனாளிகளின் திறன்களைக் கண்டறிதல்’ என்ற தனித்துவமான நிகழ்ச்சியில் 4 தென் பிராந்திய மாநிலங்களில் இருந்து 75 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காட்டில் இயங்கி வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவன நிறுவனம், இந்தியஅரசின் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறை, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகமும் இணைந்து கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களுருவில் மாற்றுத் திறனாளிகளின் தனித்துவமான திறன்களைக் கண்டறிந்து அதை வெளிப்படுத்த ‘திவ்ய கலா சக்தி’ என்ற கலை நிகழ்ச்சியை நேற்று ரவீந்திர கலாக்ஷேத்ரா கலை அரங்கத்தில் நடத்தின.

இந்நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெஹலோட் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் நாராயணசாமி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். திவ்ய கலா சக்தி என்ற இந்த கலாச்சார நிகழ்வு, கலை, இசை, நடனம், அக்ரோ பாட்டிக்ஸ், யோகா மற்றும் பல திறமைகள் கொண்ட மாற்றுத் திறனாளிகள் தங்கள் தனித்துவமான திறனை வெளிப் படுத்த நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது.

திவ்ய கலா சக்தி கலை நிகழ்ச்சியில் 4 தென் மண்டல மாநிலங்களான கர்நாடகாவில் இருந்து 42 மாற்றுத் திறனாளிகள், தமிழ்நாட்டில் இருந்து17 , கேரளாவில் இருந்து 9, புதுச்சேரியில் இருந்து 7 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 75 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு தங்களிடம் உள்ள தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 152 மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசின் இலவச உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.12.69 லட்சம் மதிப்புள்ள கற்றல்மற்றும் கற்பித்தல் சாதனங்கள், காதுகேட்கும் கருவி, மூன்று சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி, ஊன்று கோல், ஸ்மார்ட் போன் போன்ற உபகரணங்களை முன்னிலையில் ஆளுநர் தாவர் சந்த் கெஹலோட் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் நசிகேதா ரௌட், மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையர் தாஸ்சூர்யவம்சி மற்றும் பெற்றோர், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x