Published : 06 Jan 2024 07:00 AM
Last Updated : 06 Jan 2024 07:00 AM
சென்னை: தமிழகத்தில் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவைசெயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவசர மருத்துவ உதவிக்காக, தினமும் கட்டுப்பாட்டு அறைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும்கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடுகள் குறித்து அதன் மாநிலத் தலைவர் செல்வகுமார், மண்டலத் தலைவர் முகமது பிலால் ஆகியோர் கூறியதாவது: 108 சேவையைப் பொருத்தவரை சென்னை உட்பட பல மாவட்டங்களில் அழைப்பு வந்த 7 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கும் வகையிலான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக விபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகள், முக்கிய இடங்கள்,சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில்ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டில் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் 19,19,504 பேர்பயனடைந்துள்ளனர். அதில் பிரசவ சேவைகளுக்காக மட்டும்5,07,071 சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர, சாலைவிபத்துகளில் சிக்கிய 3,34,527பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், 1.19 லட்சம் இதயநோயாளிகளும், 33 ஆயிரம் குழந்தைகளும் பயனடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 1.05 லட்சம்பேர் பயன் பெற்றுள்ளனர். அதில்பிரசவ சிகிச்சைகளுக்காக 6,044 கர்ப்பிணிகள் பயனடைந்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கிய 10,659 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைஅளிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 91,084 பேர் பயனடைந்துள்ளனர். அவர்களில் 19,829 கர்ப்பிணிகளும்,சாலை விபத்துக்குள்ளான 15,866 பேரும் பயன்பெற்றுள்ளனர். அவசர காலங்களில் தாமதமின்றி ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதை தொடர்ந்து உறுதி செய்து வருகிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT