Published : 06 Jan 2024 06:09 AM
Last Updated : 06 Jan 2024 06:09 AM
பழநி: இன்று கண்காணிப்புக் குழு வருவதன் எதிரொலியாக, பழநி கிரிவலப் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆனால், கிரிவலப் பாதை முழுவதும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் நடந்து செல்லவே சிரமப் படுகின்றனர்.
இந்நிலையில், பழநியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், கிரிவலப் பாதையில் கடைகள் அமைப்பதற்கு தடை விதித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிர மிப்புகளை அகற்றவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு மற்றும் கடைகள் குறித்து ஆய்வு செய்து, நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வசதியாக ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் கண் காணிப்புக் குழுவை நியமித்து, ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
அதன்படி, பழநிக்கு இன்று (ஜன.6) கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு செய்ய வருகின்றனர். அதன் எதிரொலியாக, பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில், உதவி ஆணையர் லட்சுமி முன்னிலையில், கோயில், வருவாய் மற்றும் நகராட்சி அலு வலர்கள் போலீஸார் பாது காப்புடன் கிரிவலப் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றினர்.
ஆக்கிரமித்து கட்டி யிருந்த கடைகளை இடித்து அப் புறப்படுத்தினர். அப்போது, வியாபாரிகள் அவகாசம் கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பழநி மேற்கு கிரிவீதி, வடக்கு கிரிவீதி மற்றும் அய்யம்புள்ளி சாலை சந்திக்கும் பிரதான இடத்தில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 1,245 சதுர அடி நிலம் உள்ளது.
இந்த நிலம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பழநி நகர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் உள்ளிட்ட நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. நேற்று அந்த இடத்தில் இருந்து ஆக்கிரமிப் பாளர்களை வெளியேற்றி, கோயில் வசம் நிலம் சுவாதீனம் செய்யப்பட்டது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.5 கோடி என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT