படகு மோதி ஆலிவ் ரெட்லி ஆமை இறப்பு: கடற்கரையில் புதைப்பு

படகு மோதி ஆலிவ் ரெட்லி ஆமை இறப்பு: கடற்கரையில் புதைப்பு
Updated on
1 min read

புதுச்சேரி: முட்டையிட கரைக்கு வந்த ஆலிவ் ரெட்லி ஆமை படகு மோதி இறந்து கரை ஒதுங்கியது‌.

புதுச்சேரி முதல் மரக்காணம் வரை ஜனவரி மாதம் துவங்கி மார்ச் மாதம் வரை ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிடுவது வழக்கம். இதில் ஆலிவ் ரெட்லி எனப்படும் அரியவகை ஆமை முட்டையிட கரைக்கு வரும் போது படகு மோதி இறந்து புதுச்சேரி தலைமை செயலகம் அருகே இன்று கரை ஒதுங்கியது. 30 வயதுமிக்க 25 கிலோ எடையிலான ஆமை உடலை வனத்துறையினர் கடற்கரையில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.

முட்டையிட கரைக்கும் வரும் ஆமைகளில் சில படகு மோதியும் வலையில் சிக்கியும் இறப்பது ஆண்டுதோறும் நடக்கிறது. மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் ஜாக்கிரதையாக இருந்தாலும் இப்படி சில ஆமைகள் இறக்க நேரிடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இறந்து கரை ஒதுக்கிய ஆமையை கடற்கரை வந்த பலரும் பார்த்து செல்பி எடுத்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in