Published : 05 Jan 2024 06:00 AM
Last Updated : 05 Jan 2024 06:00 AM

மீன்வளத் துறை சார்பில் ரூ.134 கோடியில் மீன் இறங்குதளங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: மீன்வளத் துறை சார்பில் ரூ.134.29 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 6 புதிய மீன் இறங்குதளங்கள், 4 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம் - மண்டபம் வடக்கு பகுதியில் ரூ.30 கோடியிலும், மயிலாடுதுறை - சின்னமேடு கிராமத்தில் ரூ.9.78 கோடியிலும் தூண்டில்வளைவுடன் மீன் இறங்குதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு - கோவளம் கிழக்கு கிராமத்தில் ரூ.3கோடியிலும், தூத்துக்குடி - கீழவைப்பாறில் ரூ.10 கோடியிலும் மீன் இறங்குதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, ராமநாதபுரம் - தங்கச்சிமடத்தில் ரூ.8.95 கோடி, கன்னியாகுமரி - கீழமணக்குடியில் ரூ.29.50 கோடி, செங்கல்பட்டு - பழைய நடுக்குப்பம், புதுநடுக்குப்பத்தில் தலா ரூ.11 கோடி, கடலூர் - தாழங்குடாவில் ரூ.13.06 கோடி, மயிலாடுதுறை - வானகிரியில் ரூ.8 கோடியில் புதியமீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மொத்தம் ரூ.134.29 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 6 புதிய மீன் இறங்குதளங்கள், 4 மேம்படுத்தப்பட்ட இறங்குதளங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்றுகாணொலி மூலம் திறந்து வைத்தார்.

இதுதவிர, ஜெ.ஜெயலலிதா மீன்வளபல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் தூத்துக்குடி மீன்வள கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில், மாணவர்களுக்கான 29 தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன்ரூ.7.15 கோடியில் கட்டப்பட்ட மாணவர் விடுதி கட்டிடம், நாகப்பட்டினம் - தலைஞாயிறு டாக்டர் எம்ஜிஆர் மீன்வள கல்லூரி,ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.4.50 கோடியில் கட்டப்பட்டுள்ள நிர்வாக கட்டிடம் என ரூ.11.65 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

காவல்துறை கட்டிடங்கள்: அதேபோல, காவல்துறைக்கு ரூ.18.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். ஆனைமலை, குமாரபாளையயத்தில் ரூ. 8.78 கோடியில் 62 காவலர் குடியிருப்புகள் உட்பட ரூ.18.20 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x