Published : 05 Jan 2024 05:54 AM
Last Updated : 05 Jan 2024 05:54 AM
சென்னை: சென்னையில் உள்ள நகர்ப்புறவாழ்விட மேம்பாட்டு வாரியதிட்டப்பகுதிகளுக்கு மக்களுக் காக தொண்டாற்றிய பெருந்தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பர சன் தெரிவித்தார். மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட நந்தனம் ஜோகித்தோட்டம் திட்டப்பகுதியில் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.58.65 கோடி மதிப்பீட்டில்13 தளங்களுடன் 416 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. விரைவில் இத்திட்டப்பகுதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டு பயனாளிகளுக்கு குடியிருப் புகள் வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இத்திட்டப் பகுதியில் மின்சாரம், குடிநீர், மின்தூக்கிகள் மற்றும் இதர பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுதவிர, ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட டாக்டர் தாமஸ் சாலையில் ரூ.77.74 கோடியில்கட்டப்படும் 470 புதிய குடியிருப்புகள், தி.நகர் தொகுதிக்குட்பட்ட வாழைத்தோப்பு திட்டப் பகுதியில்ரூ.76.94 கோடியில் கட்டப்பட்டுவரும் 504 புதிய குடியிருப்புகளின் பணிகள், மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட வன்னியபுரம் திட்டப் பகுதியில் ரூ.36.91 கோடியில் கட்டப்பட்டு வரும் 216 புதிய குடியிருப்புகள், வன்னியம்பதி திட்டப் பகுதியில் ரூ.85.73 கோடியில் கட்டப்பட்டுவரும் 500 புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகளையும் அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்தார்.
அப்போது அவர்கூறும்போது, ‘‘திட்டப்பகுதிகளின் பெயர்கள் ஜோகித்தோட்டம், தாமஸ் சாலை,வாழைத்தோப்பு என அழைக்கப்படுவதை மாற்றி, மக்களுக்காக தொண்டாற்றிய தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்படும்’’ என்றார்.
நிகழ்ச்சியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் க.விஜய கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT