மின் உற்பத்தி பாதிப்பால் தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் மின்சாரம் குறைப்பு

மின் உற்பத்தி பாதிப்பால் தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் மின்சாரம் குறைப்பு
Updated on
1 min read

சென்னை: மத்திய அரசின் தேசிய அனல்மின் கழகம் மற்றும் இந்திய அணுமின் கழகத்துக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் உள்ளன. மேலும், தமிழகத்தில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிலக்கரி நிறுவனத்துக்கு அனல்மின் நிலையம் உள்ளது.

இந்த மின்நிலையங்களில் இருந்து தமிழகத்துக்கு தினமும்7,170 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பழுது உள்ளிட்ட காரணங்களால் சராசரியாக 5,500 மெகாவாட் வரைதான் மின்சாரம் வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் அனல்மின்நிலையத்தில் பழுதால் ஆயிரம் மெகாவாட்டும், கூடங்குளம்அணுமின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட்டும் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு 3,900 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டது. விடுமுறை மற்றும் குளிர்காலம் ஆகிய காரணங்களால் தமிழகத்தில் தற்போது தினசரி மின்தேவை 13 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்துள்ளது. இதனால், மின்தேவையைப் பூர்த்தி செய்ய மின்வாரியத்துக்கு சிரமம் ஏற்படவில்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in