மெட்ரோ ரயிலில் கடந்த ஆண்டில் 9.11 கோடி பேர் பயணம்

மெட்ரோ ரயிலில் கடந்த ஆண்டில் 9.11 கோடி பேர் பயணம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் விமானநிலையம் - விம்கோநகர், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் ஆகிய 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 2.50 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட 8 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டில் 9 கோடியே 11 லட்சத்து 2 ஆயிரத்து 957 பேர் பயணித்துள்ளனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு 3.01 கோடி பேர் அதிகம் பயணித்துள்ளனர்.

உலக மனிதவள மேம்பாட்டு கூட்டமைப்பு நடத்திய பிராண்ட் விருதுகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மனித வள மேம்பாட்டு துறைக்கு 2023க்கான சிறந்த பணியமர்த்தல் பிராண்ட், மனிதவளத்துக்கான சிறந்த பங்களிப்புகள் ஆகிய பிரிவுகளில் 2 விருதுகள் கிடைத்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in