

இந்திய ரெயில்வே துறை, இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரி சர்வீஸ், டெல்லி மாநகராட்சி ஆகிய மத்திய அரசு துறைகளில் மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) இந்த தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான தேர்வு ஜூன் 22-ம் தேதி நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த மருத்துவ பணிக்கான ஆப்ஜெக்டிவ் தேர்வு இதுவரை ஓ.எம்.ஆர். ஷீட் முறையில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது முதல்முறையாக ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது.