

நீட் தேர்வு தொடர்பாக திராவிடர் கழகம் சார்பில் பெரியார் திடலில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கிறது. கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின் றனர்.
இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வு தொடர்பாக சென்னை பெரியார் திடலில் 27-ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதன் சூழ்ச்சி மற்றும் நீட் தேர்வு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட இரு சட்டங்களின் நிலை ஆகியவை குறித்து கலந்துரையாடல் நடைபெறும்.
சமூகநீதியில் அக்கறை உள்ள கட்சிகள், அமைப்புகள், கல்வியாளர்கள், தலைவர்கள், பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற் கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.