முதல்வரை விமர்சித்த தேமுதிக நிர்வாகி கைது

முதல்வரை விமர்சித்த தேமுதிக நிர்வாகி கைது
Updated on
1 min read

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு செய்து இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை குறித்து, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தேமுதிக நகரச் செயலாளர் மல்லி (எ) சுப்பிரமணி (38) என்பவர் தனது முகநூலில் (பேஸ்புக்) விமர்சித்துள்ளார்.

அதில், முதல்வரை தரக்குறைவாகவும், கண்டனத்துக்குரிய வகையிலும் விமர்சனம் செய்திருந்ததாக அதிமுக நகரச் செயலாளர் வான்மதி சேட் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தார். இது தொடர்பாக சுப்பிரமணியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அவதூறு கிளப்பும் வகையில் தகவல் தெரிவித்தல், பெண்களின் தன்மானத்தை அசிங்கப்படுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in