

சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோயில்களில் சீரமைப்பு பணி மேற்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் அற நிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடந்தது. சென்னை, நெல்லை, தூத்துக்குடிஉள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட 26 கோயில்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கோயில்களில் சேதமடைந்துள்ள முன்அலங்கார மண்டபம், ஏகாதசி மண்டபம், படித்துறை மண்டபம், மதில் சுவர், வெளித்தெப்பம் சுற்றுச்சுவர் போன்ற கட்டுமானங்களை செப்பனிடுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கட்டுமானங்களை விரைந்து சீரமைக்கரூ.5 கோடி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டு, பணிகளை விரைந்து தொடங்கி முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அறநிலையங்கள் துறை செயலர் மணிவாசன், சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளிதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், ஹரிப்ரியா, கவிதா, தலைமை பொறியாளர் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.