Published : 27 Dec 2023 06:15 AM
Last Updated : 27 Dec 2023 06:15 AM
சென்னை: பேரிடர் நிவாரணத்தை மத்திய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியதாவது: பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் ரூ.21,652 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நேரடியாக கோரிக்கை மனுவும் அளித்துள்ளார். ஆனால் இதுவரை ஒருரூபாய்கூட மத்திய அரசு நிவாரணமாக வழங்கவில்லை.
எனவே மாநில அரசு கோரியிருக்கும் நிவாரண நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்கவும், பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தியும் வரும்ஜன.8-ம் தேதி தமிழகம் முழுவதும்மத்திய அரசின் அலுவலகங்களுக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “கனமழை பாதிப்புக்கு பேரிடர் நிவாரண நிதியாக தமிழக அரசு கேட்ட ரூ.21 ஆயிரம் கோடியைஉடனடியாக மத்திய அரசு வழங்கவற்புறுத்தி வரும் ஜன.3-ம் தேதி,சென்னை சாஸ்திரிபவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT