“ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது வருத்தம்தான்” - லதா ரஜினிகாந்த்

“ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது வருத்தம்தான்” - லதா ரஜினிகாந்த்

Published on

சென்னை: இந்தியா சினிமாவின் உச்ச நடிகரும், தனது கணவருமான நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது தனக்கு வருத்தம் அளித்ததாக லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து உங்கள் பார்வை என்ன என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. “அவர் அரசியலுக்கு வராதது வருத்தம்தான். ஏனெனில், அவரை நான் ஒரு தலைவராக பார்த்தேன். அவர் சிறந்த தலைவர். அதனால் அது வருத்தமே. இருந்தாலும் அதற்கான காரணமும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் இருந்தது. அதற்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும்” என லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

கடந்த 1990-கள் முதலே ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென சொல்லப்பட்டு வந்தது. அவரும் திரைப்படங்கள், சினிமா நிகழ்ச்சிகளில் அரசியல் சார்ந்து பேசி வந்தார். அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. கடந்த 2017-ல் ‘ஆன்மிக அரசியல்’ செய்வேன் என வெளிப்படையாக பேசி இருந்தார். பின்னர் 2021-ம் ஆண்டு அரசியலில் ஈடுபடும் திட்டம் இல்லை என சொல்லி ரஜினி மக்கள் மன்ற அமைப்பை கலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in