நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: குமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: குமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
Updated on
1 min read

நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஜனவரி 4-ம் தேதி முதல் வாரம் ஒருமுறை வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது போல் நாகர்கோவிலில் இருந்தும் இயக்க வேண்டும் என்று கன்னியா குமரி மாவட்ட மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நாகர்கோவில் கோட்டாறு சந்திப்பில் இருந்து சென்னைக்கு ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 05.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடையும்.இது போல் மறு மார்க்கத்தில் நாகர்கோவில் சந்திப்பில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு குமரி மாவட்ட பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்க ஆணை பிறப்பித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இதற்காக முயற்சி மேற்கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி., ஆகியோருக்கு ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in