Published : 25 Dec 2023 06:12 AM
Last Updated : 25 Dec 2023 06:12 AM
சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் இரண்டுமுனையங்களில் இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் குறைந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் ஒரே முனையமாக இருந்தது. கடந்த நவம்பர் 15-ம் தேதி டெர்மினல்-1, டெர்மினல்-4 என இரு முனையங்களாக செயல்பட்டு வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட டெர்மினல் 4-ல் இருந்து ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் விமான நிறுவனங்களின் வருகை, புறப்பாடு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் ஏர் இந்தியாஎக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் உள்நாட்டு விமான சேவைகள் டெர்மினல் 4-க்கு மாற்றப்பட்டுள்ளன. வரும் 27-ம் தேதி முதல் டெர்மினல்-1-ல் இருந்து இயக்கப்பட்டுவரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்களின் வருகை, புறப்பாடு விமானங்கள் அனைத்தும் டெர்மினல்-4-ல் இருந்து இயக்கப்படவுள்ளது.
இட வசதிகள் கிடைக்கும்: இதன் மூலம் பழைய உள்நாட்டு முனையமான டெர்மினல்-1-ல் இனிமேல் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்து, நெரிசல்கள் இல்லாமல், பயணிகளுக்கு தாராளமான இட வசதிகள் கிடைக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT