

மறைந்த பத்திரிகையாளர் ஞாநி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், "ஞாநி என் நண்பர்; நான் அவரது ரசிகன். துணிச்சலாக மக்களுக்காக பேசும், எழுதும் ஞாநியின் திடீர் மறைவு எனக்கு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" எனத் தெரிவித்தார்.
பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞானி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64. கடந்த சில காலமாகவே அவர் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டுவந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி வரை அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
ஞாநியின் உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது.