Published : 29 Jan 2018 09:41 AM
Last Updated : 29 Jan 2018 09:41 AM

மார்க்சிஸ்ட் ஒலி இதழ் தொடக்கம்

மார்க்சிஸ்ட் இதழின் கட்டுரைகளை ஒலி வடிவில் கேட்கும் வசதி நேற்று தொடங்கப்பட்டது.

மார்க்ஸ்’ 200 நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம்” நூல் வெளியீட்டு விழா சென்னை, அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலக அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் மாத இதழின் ஆசிரியர் என்.குணசேகரன் தலைமை தாங்கினார். நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், எம்பியுமான டி.கே.ரங்கராஜன் வெளியிட, இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஜான்சி பெற்றுக் கொண்டார்.

பின்னர், தமிழக இதழியல் துறையில் முதன் முதலாக ஒலி இதழ் வடிவில் மார்க்சிஸ்ட் மாத இதழ் வெளியிடப்பட்டது. இதனை ஊடகவியலாளர் ஜென்ராம் தொடங்கி வைத்தார். எழுத்தறிவுக் குறைபாடு, பார்வைத் திறன் சிக்கல் உள்ளோர் மார்க்சிஸ்ட் இதழின் கட்டுரைகளை இனி ஒலி வடிவில் கேட்க முடியும்.

கட்டுரைகளை ஒலி வடிவில் கொடுக்க டிடிஎஸ் தொழில்நுட்பமும், மனிதக் குரலை பதிவு செய்கிற தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த இதழை கூகுள் பிளே ஸ்டோரில் Marxist Reader என்ற பெயரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x