

பத்திரிகையாளார் ஞாநி கடைசியாக தனது ஃபேஸ்புக்கில் குருமூர்த்தியை விமர்சித்து கருத்து பகிர்ந்திருந்தார்.
பூசி மெழுகாமல், பட்டென்று வெளிப்படையாகப் போட்டுடைக்கும் தைரியமான பத்திரிகையாளர், எழுத்தாளர்களில் ஒருவராக ஞாநி திகழ்ந்தார்.
அந்த வகையில் நேற்றைய ஃபேஸ்புக் பதிவிலும் வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதுவே அவரது கடைசி பதிவாகும் என யாரும் அறிந்திருக்கவில்லை.
அந்தப் பதிவில், "துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பி.ஜே.பி நிலை எடுக்கிறார்.
சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பி.ஜே.பியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க பி.ஜே.பி சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார்.
இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும்" என அவர் எழுதியிருந்தார்.