சடையநேரி கால்வாயில் உடைப்பு - 7 கிராமங்களுக்கு அபாயம்

வட்டன்விளை கிராமத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.
வட்டன்விளை கிராமத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.
Updated on
1 min read

தூத்துக்குடி: சடையனேரி கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக திருச்செந்தூர் அருகே பரமக்குறிச்சி கஸ்பா, வட்டன்விளை, மாநாடு உள்ளிட்ட 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் ஸ்ரீவைகுண்டம், ஏரல் வட்டங்களில் உள்ள கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தாமிரபரணி ஆற்றின் உபரிநீர் செல்லும் சடையநேரி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி கஸ்பா, வட்டன்விளை, மாநாடு, வெள்ளானவிளை, சியோன் நகர் உள்ளிட்ட கிராமங்களை சூழ்ந்து வருகிறது. இப்பகுதியில் 7 கிராமங்களை வெள்ளம் சூழ் ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சடையநேரி கால்வாய் உடைப்பை சரி செய்யாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in