குரூப் 4 பணிக்கு 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு: ஜன.3-ம் தேதி நடைபெறும்

குரூப் 4 பணிக்கு 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு: ஜன.3-ம் தேதி நடைபெறும்
Updated on
1 min read

சென்னை: டிஎன்பிஎஸ்சி குருப் 4 பணிகளுக்கான 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குருப்-4 பணிகளில் அடங்கிய இளநிலை உதவியாளர், வரி தண்டலர், பண்டக காப்பாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கான 2-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜனவரி 3-ம் தேதி சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தெரிவுப்பட்டியல், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அழைப்பாணை தனியாக தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.

உறுதியளிக்க இயலாது: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு, காலியிடங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டு, பணிநியமனம் வழங்கப்படும் என்பதற்கு உறுதி அளிக்க இயலாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in