Published : 23 Dec 2023 06:17 AM
Last Updated : 23 Dec 2023 06:17 AM
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தாம்பரம் - மங்களூரு சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06129) இன்றும் (டிச.23), 30-ம் தேதியும் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து இரவு11.20 மணிக்குப் புறப்பட்டு எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, பாலக்காடு, ஷொரனூர் வழியாக மறுநாள் மாலை 6.15 மணிக்கு மங்களூரு சென்றடையும். மறுமார்க்கத்தில், இந்த சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06130) மங்களூருவில் இருந்து நாளை மறுதினம் (டிச.25) மற்றும் ஜன.1-ம்தேதியன்று இயக்கப்படுகிறது. மங்களூருவில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு தாம் பரம் வந்தடையும்.
இதேபோல், தாம்பரம் - கொல்லம் இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06119) இன்றும் (டிச.23), 30-ம் தேதியும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்குப் புறப்பட்டு எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் வழியாக மறுநாள் காலை 6.45 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில், சிறப்பு ரயில் (06120) கொல்லத்தில் இருந்து நாளையும் (24-ம் தேதி), 31-ம்தேதியும் இயக்கப்படுகிறது. கொல்லத்தில் இருந்து காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
செந்தூர் அதிவிரைவு ரயில்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ரயில் பாதைசீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதன் காரணமாக, சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் அதி விரைவு ரயில் (20605) டிச.22 முதல் வரும் 31-ம் தேதி வரை திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. எனவே, இந்த ரயில் எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT