

மதுரை: தூத்துக்குடியில் மழைவெள்ளத் தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாற்றுத் திறனாளிக்கு தன்னுடைய 3 சக்கர வாகனத்தை வழங்குமாறு மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி, நேதாஜி ஆம் புலன்ஸ் நிறுவனத்திடம் ஒப் படைத்தார். தூத்துக்குடியில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தில் ஏழை, நடுத்தர மக்கள் பெரு மளவு உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பலர் வாழ் வாதாரத்தை இழந்து தவிக் கின்றனர். மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ‘மாற்றம் தேடி’ பால முருகன், தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தனது 3 சக்கர சைக்கிளை வழங்க முன்வந்துள்ளார். இந்த வாகனத்தை மதுரை ராஜாஜி மருத்துவமனை அரு கில் உள்ள நேதாஜி ஆம்புலன்ஸ் உரிமையாளரும் சமூக ஆர்வலருமான ஹரிகிருஷ்ண னிடம் பாலமுருகன் ஒப்படைத்தார். அந்த வாகனம் விரைவில் தூத் துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.