Published : 25 Jan 2018 09:03 AM
Last Updated : 25 Jan 2018 09:03 AM

ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்துக்கு ரூ.1கோடி நிதி: முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்

ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த ஆய்வாளர் பெரியபாண்டியன் மனைவி பானுரேகாவிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் கே.பழனிசாமி வழங்கி னார்.

சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளைசம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களைப் பிடிக்க மதுரவாயல் ஆய்வாளர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ் தான் மாநிலம் சென்றது. அங்குள்ள பாலி மாவட்டத்தில், ஜெய்த்ரான் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க, பெரியபாண்டியன் தலைமையிலான போலீ ஸார் கடந்த டிசம்பர் 8-ம் தேதி அங்கு சென்றனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில், காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இச்சம்பவம் போலீ ஸார் மத்தியிலும் தமிழகத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முதல் வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த பெரியபாண்டியன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

இதன்படி, நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி, ரூ.1 கோடிக்கான காசோலையை பெரியபாண்டியனின் மனைவி பானுரேகாவிடம் வழங்கினார். பெரியபாண்டியனின் மகன்கள் மற்றும் குடும்பத்தினர், தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகி யோர் அப்போது உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x