

தமிழகத்தின் தென் கடலோரப் பகுதியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானி லை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளக் கடலோரப் பகுதியை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையில் வானம் ஓர ளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிப்பொழிவு இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக உதகையில் 6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. குன்னூரில் 11, கொடைக்கானலில் 9, வால்பாறையில் 14 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. நிலப் பகுதிகளான திருப்பத்தூர் 17.8, தருமபுரி 18.2, வேலூர் 18.6, சென்னை விமான நிலையம் 20.6, நுங்கம்பாக்கம் 21.3 டிகிரி செல்சியஸ் என குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.