

சென்னை: சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னை எழும்பூர் - கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்துடிச.22, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு 11.55 மணிக்கு சிறப்புரயில் (06127) புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை அடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து டிச.23, 25 ஆகியதேதிகளில் (சனி, திங்கள்கிழமைகளில்) இரவு 7.35 மணிக்கு சிறப்பு ரயில் (16128 ) புறப்பட்டு, மறுநாள் பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயில்பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர் வழியாக கொல்லத்தை அடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.
தற்காலிகமாக நிறுத்தம்: இருமுடி மற்றும் தைப்பூசம் விழாவை முன்னிட்டு, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையேஇயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும். சென்னை எழும்பூரில் இருந்து டிச.22-ம் தேதிமுதல் ஜன.19-ம் தேதி வரை இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில்(16069), மறுமார்க்கமாக, திருநெல்வேலி - சென்னை எழும்பூருக்கு டிச.28-ம் தேதி முதல் ஜன.18-ம்தேதி வரை இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (06070) ஆகிய இரு ரயில்கள் 2 நிமிடம் தற்காலிகமாக மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.