Published : 22 Dec 2023 06:07 AM
Last Updated : 22 Dec 2023 06:07 AM

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஜன.24-ம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறவலியுறுத்தி ஜன.24-ம் தேதி சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். தேசிய அளவிலான கட்சி சார்பற்ற எஸ்.கே.எம். அமைப்பு கூட்டம், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்புச் சட்டம்-2023, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொண்டுவரப்படாத மிக மோசமான, விவசாயிகளுக்கு விரோதமான சட்டமாக உள்ளது. விளை நிலங்களை அபகரிப்பதோடு, அதைச் சுற்றியுள்ள நீர்நிலைகளையும் அபகரித்துக் கொள்ள வழிவகுக்கும் இச்சட்டம், தமிழகத்தில் பேரழிவை ஏற்படுத்தும்.

தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தை தேசிய அளவில் தீவிரப்படுத்த வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில்கொண்டு தமிழகத்தில் கட்சி சார்பற்ற சம்யுக்த கிசான்மோர்ச்சா (SKM) அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதை தேசிய அளவிலான அமைப்போடு இணைந்து செயலாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தலைவராக திருச்சிஅய்யாக்கண்ணுவும், ஒருங்கிணைப்பாளராக நானும் தேர்வுசெய்யப்பட்டுள்ளோம். அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி பஞ்சாபில் தொடங்கி, டெல்லி நாடாளுமன்றம் நோக்கி நடத்த இருக்கும் பேரணியில் பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜன.24-ம் தேதி தமிழக அரசுக்குஎதிராகவும், நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x