Published : 22 Dec 2023 06:10 AM
Last Updated : 22 Dec 2023 06:10 AM
சென்னை: ஹஜ் பயணத்துக்கு ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜன.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்பான்மையினர் நலத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புனித ஹஜ் பயணிகள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியை இந்திய ஹஜ் குழு ஜன.15 வரை நீட்டித்துள்ளது. ஆன்-லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாகப் பூர்த்தி செய்யலாம். பின்னர் விண்ணப்பதாரர்கள் ஜன.15 அல்லது அதற்கு முன் வழங்கப்பட்டு குறைந்தது ஜன.31, 2025 வரை செல்லத்தக்க, இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குழுத் தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது IFSC குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகநகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ஹஜ் குழு இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT