

பழநி: எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து, திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக சார்பில், பழநி மயில் ரவுண்டானா அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். நகர தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், துணை ஜனாதிபதியை அவமரியாதை செய்ததாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜெயராமன், ராமசாமி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மணிக்கூண்டு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். மாநிலங்களவை தலைவரை அவமரியாதை செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. கிழக்கு மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.