Published : 22 Dec 2023 04:06 AM
Last Updated : 22 Dec 2023 04:06 AM
விழுப்புரம்: பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் விழுப்புரம் திமுகவினர் சோகமடைந்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன் முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தர விட்டுள்ளது.
வழக்கமாக பரபரப்பாக காணப்படும் கிழக்கு புதுச்சேரி சாலையில் போக்குவரத்து மந்தமாகவே காணப்பட்டது. மேலும் காந்தி கடை வீதி, திரு வி க வீதி, கன்னியாகுளம் சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. நேற்று காலை 10 மணி முதல் சில இடங்களில் மின் தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கிழக்கு சண்முகபுரம் காலனியில் உள்ள பொன் முடியின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் வெறிச் சோடி காணப்பட்டது. காந்தி சிலை அருகே உள்ள நகர திமுக அலுவலகத்தில் சில திமுக நிர்வாகிகள் யாரிடமும் பேசாமல் அமர்ந்திருந்தனர். தீர்ப்பு வெளியான பின்பு ஒரு மாத காலத்துக்கு தண்டனை நிறுத்தி வைப்பு என்ற தகவல் அறிந்த திமுகவினர்.மற்றும் பொது மக்கள் நிம்மதி அடைந்தனர்.
ஆனாலும் பொன்முடியின் அமைச் சர் பதவி பறிக்கப்பட்டதும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டதை அறிந்த திமுக-வினர் மீண்டும் சோகமாகினர்.முக்கியமான திமுக நிர்வாகிகள் அனைவரும் நேற்று சென்னையில் குவிந்ததால் விழுப்புரம் நகரில் திமுக மாவட்ட, நகர அலுவலகங் கள் வெறிச்சோடி காணப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT