Published : 21 Dec 2023 05:39 AM
Last Updated : 21 Dec 2023 05:39 AM

எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து பாஜக இன்று ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டதலைநகரங்களில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எதிர்கட்சிகளை சார்ந்த எம்.பி.க்கள், கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற மரபுகளை மீறியும்,பொது மக்களுக்கு தாங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கடமையை மறந்தும், அரசியல் சாசன பதவியில் உள்ளவர்களிடம் அவமரியாதையாக நடத்து வந்ததையும் நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். இந்த தவறான நடத்தையை இன்னும் அவர்கள் தொடர்ந்து கொண்டிருப்பது நாடாளுமன்றத்துக்கு மட்டுமின்றி மக்கள் மன்றத்துக்கும் அவமானமாகும்.

துணை குடியரசு தலைவர் மற்றும் அவைத் தலைவரை தூற்றியும், அவமரியாதையும் செய்த ராகுல் காந்தி மற்றும் அவருக்கு துணை நின்ற இதர எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களை கண்டித்து இன்று (21-ம் தேதி) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். அரசியல் சாசன அமைப்புகள் இயங்க முடியாமல் முடக்கியவர்களுக்கு எதிராக தமது கண்டன குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x