சி.வி.சண்முகம் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு பதிவு

சி.வி.சண்முகம் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு பதிவு
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த ஜூன்மாதம் அதிமுக சார்பில் நடந்தபொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம்,தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாகப் பேசியதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சுப்ரமணியன் நேற்று வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிபூர்ணிமா, ஜன.4-ம் தேதி இவ்வழக்கை தள்ளிவைத்தார். அன்றைய தினம் சி.வி. சண்முகம் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

சி.வி.சண்முகம் மீது ஏற்கெனவே செஞ்சி அருகே நாட்டார் மங்கலம், திருசிற்றம்பலம், பகுதிகளில் நடந்த அதிமுக பொதுக்கூட்டங்களில் தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாகப் பேசியதாக 2 வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in