Published : 21 Dec 2023 06:09 AM
Last Updated : 21 Dec 2023 06:09 AM

30-க்கும் மேற்பட்ட ரயில் சேவை ரத்து: சென்னை - திருநெல்வேலி விரைவு ரயில் இயங்கியது

சென்னை: தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், 3-வது நாளாக நேற்றுரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. அதேநேரத்தில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி விரைவு ரயில்நேற்று முதல் வழக்கமாக இயக்கப்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால், திருநெல்வேலி - திருச்செந்தூர் உள்ளிட்ட சில முக்கிய வழித்தடங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளன. இதனால், ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேதமடைந்துள்ள இடங்களில், ரயில் பாதை சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், 3-வது நாளாக நேற்றும் 30-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.

திருச்செந்தூர் - திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி - திருச்செந்தூர், திருநெல்வேலி – செங்கோட்டை, திருநெல்வேலி – நாகர்கோவில், வாஞ்சிமணியாச்ச - தூத்துக்குடி, தூத்துக்குடி - திருநெல்வேலி உட்பட 30-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. அதேநேரத்தில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி விரைவுரயில் நேற்று முதல் வழக்கமாக இயக்கப்பட்டது. மழை முடிந்து, பல்வேறு இடங்களில் நீர் அகற்றப்பட்டு வருகின்றன. எனவே, அடுத்த இரண்டு நாட்களில் வழக்கமாக ரயில்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x