கனமழைக்கு நடுவே 2 நாட்கள் ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கி தவித்த பயணிகள்: சிறப்பு ரயில் மூலம் நேற்று சென்னை திரும்பினர்

மழை, வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலை யத்தில் சிக்கி தவித்த ரயில் பயணிகள், சிறப்பு ரயில் மூலம் நேற்று எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தனர். 
| படம்: எஸ்சத்தியசீலன் |
மழை, வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலை யத்தில் சிக்கி தவித்த ரயில் பயணிகள், சிறப்பு ரயில் மூலம் நேற்று எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தனர். | படம்: எஸ்சத்தியசீலன் |
Updated on
1 min read

சென்னை: திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17, 18 தேதிகளில் பெய்த கனமழை காரணமாக, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்பிறகு, ரயிலில் இருந்த 1,000 பயணிகள் மீட்கப்பட்டனர். இதனிடையே 2 நாட்களுக்கு பிறகு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து நடந்து வந்தவர்கள் வல்லூரில் இருந்து பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, அங்கிருந்து இரவு சிறப்பு ரயில்மூலமாக நேற்று மதியம்1.05 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதுகுறித்து பயணி பொன்ராஜ் என்பவர் கூறியதாவது: சென்னையில் இருந்து தெய்வ வழிபாட் டுக்காக ஊருக்கு சென்று இருந்தோம். பின்னர் ரயிலில் திரும்பியபோது கனமழையால் ரயில் தண்டவாளம் நீரில் மூழ்கியது. இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ரயில்நிறுத்தப்பட்டது. முதல்நாள் எந்தவித உதவியும் கிடைக்காமல் தவித்தோம். அந்த நேரத்தில், அருகில் இருந்த புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எங்களுக்கு உணவு கொடுத்தனர். அந்த மக்கள் ஆதரவு இல்லாவிட்டால் இங்கு நாங்கள் நின்ற பேசக்கூட முடியாது. இதுபோல மீட்புகுழுவினர், காவல்துறையினர் எங்களை அங்கிருந்துபாதுகாப்பாக அழைத்து வந்து, பேருந்தில் ஏற்றிவாஞ்சிமணியாச்சி நிலையத்துக்கு அனுப்பிவைத் தனர். அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார் எழும்பூர் ரயில்நிலை யத்தில் பயணிகளுக்கு மருத்துவ உதவி, உணவு ரயில்வே நிர்வாகம் சார்பில்வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in