Last Updated : 11 Jan, 2018 02:27 PM

 

Published : 11 Jan 2018 02:27 PM
Last Updated : 11 Jan 2018 02:27 PM

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா கோலாகலத் தொடக்கம்: வரவேற்பைப் பெற்ற 2.O, ஆங்கிரி பேர்ட், ஐஸ்கிரீம் வடிவ பலூன்கள்

 

பொள்ளாச்சியில் 4-ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் முதல் பலூன் பறக்க விடப்பட்டது.

அமெரிக்கா, பிரான்ஸ், போலந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த 12 வெப்ப காற்று பலூன்கள் பறக்க விடப்பட்டன. 8 நாடுகளைச் சார்ந்த 12 பைலட்கள் பங்கேற்றனர் .

இதில் தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறையின் இலச்சினையுடன் கூடிய பலூன், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர உள்ள 2.O 3டி பலூன், ஆங்கிரி பேர்ட், ஐஸ்கிரீம் வடிவில் அமைக்கப்பட்ட பலூன்கள் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

விழாவின் தொடக்கமாக காலை 7.10 மணியளவில், முதல் பலூன் வானில் பறக்கத் தொடங்கியது. அடுத்தடுத்து பலூன்கள் தரையில் இருந்து சுமார் 1,500 அடி உயரத்தில் காற்று வீசும் திசையில் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை பறந்து சென்றன.

அமெரிக்காவைச் சார்ந்த நிக் என்பவர் 2.O பலூனுக்கும், மரியா என்பவர் தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறையின் பலூனுக்கும், நெதர்லாந்தைச் சார்ந்த த்ரிஷா ஆங்கிரி பேர்ட் பலூனுக்கும் பைலட்டுகளாக இருந்து பலூன்களைப் பறக்கச் செய்தனர்.

பலூனில் பறக்கலாம்

இன்று (ஜன.11) முதல் வரும் 15-ம் தேதி வரை இரவு வரை நாள்தோறும் மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை பலூன் திருவிழா நடைபெறும். அதில் பயணிகள் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

விழாத் திடலில் குறிப்பிட்ட உயரத்தில் வானில் 10 நிமிடங்கள் பலூன்கள் நிலை நிறுத்தப்படும். பலூனில் பறக்கும் பொதுமக்கள் வானில் இருந்தபடியே பொள்ளாச்சி நகரின் அழகை ரசிக்கலாம். இதற்காக ஒரு நபருக்கு ரூ.1,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x