

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையைச் சேர்ந்த 1673 பேருக்கு அஞ்சல் ஓட்டு வழங்கப்பட இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள 1,809 பேரில் 1226 போலீஸார், 217 காவல் இளைஞர் படையினர், 230 ஊர்க்காவல் படையினர் என 1673 பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு அஞ்சல் ஓட்டுகளை அனுமதிக்குமாறு தேர்தல் துறையிடம் கோரியிருக்கிறோம். மீதம் உள்ள 136 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை அளித்துள்ளனர். அவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்ந்தவுடன், அவர்களுக்கும் அஞ்சல் ஓட்டுகளை அனுமதிக்க தேர்தல் துறையிடம் கோரப்படும் என்றார் அவர்.