வெள்ளம் சூழ்ந்த கொக்கிரகுள சிறையில் இருந்து 33 பெண் கைதிகள் மீட்பு

வெள்ளம் சூழ்ந்த கொக்கிரகுள சிறையில் இருந்து 33 பெண் கைதிகள் மீட்பு
Updated on
1 min read

திருநெல்வேலி: கொக்கிரகுளத்திலுள்ள கிளை சிறையில் தவித்த 33 பெண்கள் கைதிகள் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலியில் தாமிர பரணி ஆற்றங்கரையில் உள்ள கொக்கிரகுளத்தில் பெண்களுக்கான கிளை சிறை அமைந்துள்ளது. இச்சிறையை வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து அங்கு தவித்த 33 பெண் கைதிகள் மற்றும் 5 சிறைப் பணியாளர்களை மீட்க, மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி, பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து படகுகள் மூலம் சிறை கைதிகளும், சிறை பணியாளர்களும் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in