

அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தமிழக நீர்வளத் துறை அமைச்சராகவும் திமுக பொதுச் செயலாளராகவும் இருப்பவர் துரைமுருகன். நேற்று முன்தினம் இரவு லேசான காய்ச்சல், சளி பிரச்சினை இருந்ததால், சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனைகளை செய்தனர். பின்னர், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று துரைமுருகன் வீடு திரும்பினார். சில ஆண்டுகளுக்கு முன்பு இதய பிரச்சினைக்கு துரை முருகன் சிகிச்சைப் பெற்றார். அதற்கான தொடர்பரிசோதனை, வயோதிக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.