Published : 20 Dec 2023 06:20 AM
Last Updated : 20 Dec 2023 06:20 AM

புற்றுநோயைக் குறைக்க ஸ்ரீராமச்சந்திரா பல்கலை. ஆராய்ச்சியில் வெற்றி: மருத்துவ இதழில் ஆராய்ச்சி கட்டுரை வெளியீடு

சென்னை: புகையிலை பழக்கத்தை கைவிடவும், புற்று நோயை குறைக்கவும் புதிய ஆராய்ச்சியை ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம் வெற்றிகரமாக செய்துள்ளது. சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருந்தியல் துறை ஆய்வாளர்களும், மருத்துவர் களுமான முருகேசன் ஆறுமுகம், ராமன் லட்சுமி சுந்தரம், ஜெரார்டு ஏ.சுரேஷ், சதீஷ்குமார் கேசவன், விஷால் ஜெயஜோதி, மனீஷ் அருள்ஆகியோர் புகையிலை பழக்கத்தை எதிர் விளைவுகள் இன்றி கைவிடுவதற்கும், புற்றுநோய் வாய்ப்புகளை குறைப்பதற்குமான புதிய மருத்துவ ஆராய்ச்சி நடவடிக்கைகள் ‘அட்வான்சஸ் இன் ரெடாக்ஸ் ரிசர்ச்' என்ற மருத்துவ இதழில் ஆய்வுக் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

நிக்கோடின் ரத்தத்தில் கலப்பு: இதுதொடர்பாக ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புகையிலை பழக்கத்தால் உடலில் ஊடுருவும் நிக்கோடின் வளர்சிதை மாற்றமடைந்து கோடினைனாக ரத்தத்தில் கலக்கிறது. தொடர்ந்து அதிகரித்தால் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. புகையிலை பழக்கத்தை கைவிடுவதற்கு நிகோடின் கலந்த சுவிங்கங்கள், மிட்டாய்கள் பரிந் துரைக்கப்படுகின்றன. இதன் கார ணமாகவும் உடலில் நிகோடின் அளவு அதிகரிக்கும். எனவே அதற்கு மாற்றான ஆராய்ச்சியை ஸ்ரீராமச்சந்திரா கல்வி நிறுவனம் மேற்கொண்டது. அதன்படி, அஸ் கார்பிக் அமில சிகிச்சை முறை பயன் படுத்தப்பட்டது.

ஆஸ்கார்பிக் அமிலம் மருந்துகள்: புகையிலை பழக்கம் உள்ளவர்களுக்கு நாவில் கரையக்கூடிய சிறு வில்லைகளாக அதை வழங்கியபோது, கோடினைன் மீண்டும்நிக்கோடினாக மறுசுழற்சி அடைவது உறுதிசெய்யப்பட்டது. ஆஸ்கார்பிக் அமிலத்தைக்கொண்ட மருந்துகளை (வைட்டமின்சி) வழங்கும்போது ரத்தத்தில் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகள் குறைகிறது. புகையிலை பழக்கத்திலிருந்து விடுதலையாக அது உதவுகிறது. அடுத்தகட்டமாக ரத்தத்தில் கலந்துள்ள கோடினைனை முழுமையாக குறைப்பதற்கான வழிமுறை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x