சென்னை - தூத்துக்குடி இடையே விமான சேவை ரத்து

சென்னை - தூத்துக்குடி இடையே விமான சேவை ரத்து
Updated on
1 min read

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதிகன மழையால் சென்னை - தூத்துக்குடி இடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டது. தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியில் அதிகனமழை பெய்து வருகிறது. அம்மாவட் டங்களில் நிலவும் மோசமான வானிலையால், சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானங்கள் மற்றும் தூத்துக்குடியில் இருந்துசென்னை வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள்: நேற்று காலை 5.45 மணி மற்றும் காலை 10 15 மணிக்கு, சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய 2 இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் மற்றும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு காலை 9.40 மணி மற்றும் மதியம் 1.40 மணிக்கு வரவேண்டிய 2 இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், தூத்துக்குடி செல்ல வந்த விமான பயணிகள் மதுரை விமானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி நேற்று காலை காலை 5.45 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் தூத்துக்குடி செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார். ஆனால் அந்த விமானம் ரத்து காரணமாக, காலை 7.55 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in