

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 10 மணி நேரத்தில் அம்பாசமுத்திரத்தில் 239 மி.மீ., சேரன்மகாதேவியில் 262, மணிமுத்தாறில் 192 மி.மீ., நாங்குநேரியில் 243 மி.மீ., பாளையங்கோட்டையில் 274 மி.மீ., பாபநாசத்தில் 239 மி.மீ., ராதாபுரத்தில் 219 மி.மீ., திருநெல்வேலியில் 180 மி.மீ., சேர்வலாறில் 170 மி.மீ., கன்னடியின் அணைக்கட்டில் 167 மி.மீ., களக்காட்டில் 213 மி.மீ., கொடுமுடியாறு அணையில் 238 மி.மீ., மூலக்கரைப்பட்டியில் 330 மி.மீ., நம்பியாறு அணையில் 284 மி.மீ., மாஞ்சோலையில் 350 மி.மீ., காக்காச்சி பகுதியில் 346 மி.மீ., நாலுமுக்கு பகுதியில் 323 மி.மீ., ஊத்து பகுதியில் 334 மி.மீ. என மொத்தம் 4,604 மி.மீ. மழை பதிவானது. இதன் சராசரி அளவு 256 மி.மீ. ஆகும்.
நேற்று மாலை 3 மணி நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 23,388 கனஅடி, சேர்வலாறு அணைக்கு 10,565 கனஅடி என, மொத்தம் 33,953 கனஅடி நீர் வரத்து இருந்தது. 17 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 28,215 கனஅடி நீர் வந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் 7 மணி நேரத்தில் 9 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 11 அடியும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 12 அடியும் உயர்ந்தது. தென்காசி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து மாலை வரை 10 மணி நேரத்தில் ஆய்க்குடியில் 76 மி.மீ., தென்காசியில் 75.40 மி.மீ., குண்டாறு அணையில் 42 மி.மீ., செங்கோட்டையில் 40.80 மி.மீ., கடனாநதி அணையில் 30 மி.மீ., கருப்பாநதி அணையில் 29 மி.மீ., அடவிநயினார் அணையில் 23 மி.மீ. ராமநதி அணையில் 20 மி.மீ., சிவகிரியில் 27 மி.மீ., சங்கரன்கோவிலில் 17 மி.மீ. என மொத்தம் 380.20 மி.மீ. மழை பதிவானது. இதன் சராசரி அளவு 38 மி.மீ. ஆகும்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 12 மணி நேரத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் அதிகபட்சமாக 394 மி.மீ., மழை பெய்துள்ளது. சாத்தான்குளத்தில் 306.40 மி.மீ., மழையும், திருச்செந்தூரில் 185 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. இதர இடங்களில் 12 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): தூத்துக்குடி 40.70, காயல்பட்டினம் 124, குலசேகரன்பட்டினம் 109, கோவில்பட்டி 138, கழுகுமலை 52, கயத்தாறு 110, கடம்பூர் 155, எட்டயபுரம் 64.60, விளாத்திகுளம் 64, காடல்குடி 27, வைப்பார் 68, சூரன்குடி 65, ஓட்டப்பிடாரம் 65, மணியாச்சி 90, வேடநத்தம் 35, கீழஅரசரடி 25.