

சென்னை: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின்எம்.பி.க்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மக்களவை குழுதலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சமீபத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வண்ணப் புகை குப்பிகளை வீசியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பாக கேள்வி எழுப்பிய திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அடுத்தகட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பதுஎன்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கெனவே, எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.