Published : 17 Dec 2023 05:27 AM
Last Updated : 17 Dec 2023 05:27 AM
சென்னை: உலக கராத்தே பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில் சிறந்த கராத்தே வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சங்கத்தின் தலைவர் எஸ்.பாலமுருகன் தலைமை வகித்தார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த கராத்தே வீரர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பெண்களுக்கு எதிராக யார் குற்றம் இழைத்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். அதற்கு இந்த கட்சி, அந்த கட்சி என்பதில்லை.
மத்திய அரசிடம் நிதியை கேட்கும் விதம் என்பது ஒன்றுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டமுறை தவறு. மக்கள் வரிப்பணத்தை பற்றி அவர் பேசுகிறார். இன்றைக்கு எந்த மக்களின் வரிப்பணத்தில் இலாகா இல்லாத ஒரு அமைச்சரை தமிழகஅமைச்சரவையில் வைத்திருக்கிறீர்கள்?
அதுமட்டுமின்றி தமிழக அமைச்சர்களது பலரது வீட்டில்எடுக்கப்பட்ட பணம் யாருடைய வரிப்பணம், மக்களின் பணம் இல்லையா, தமிழகத்துக்கான நிதி தகுதியான நேரத்தில் வழங்கப்படாவிட்டால் அதற்கு குரல் எழுப்ப நானும் தயாராக இருப்பேன்.பாரபட்சமாக நடந்துகொள்ளவில்லை. இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT