இது ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால்..!- பேருந்து கட்டண உயர்வு குறித்து கமல் ட்வீட்

இது ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால்..!- பேருந்து கட்டண உயர்வு குறித்து கமல் ட்வீட்
Updated on
1 min read

பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும் என நடிகர் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை இரவு ட்வீட் செய்திருக்கிறார்.

தமிழக அரசை எப்போதுமே ட்விட்டரில் விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கமல்ஹாசன், பேருந்து கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

அரசியல் பிரவேசத்தை அறிவித்த பின்னரும்கூட ரஜினியும், கமலும் ஏன் பேருந்து கட்டணம் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என வாதவிவாதங்கள் எழுந்த நிலையில் கமல்ஹாசன் ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே!" என காட்டமாக பதிவு செய்திருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in