Published : 13 Jan 2018 17:01 pm

Updated : 13 Jan 2018 17:08 pm

 

Published : 13 Jan 2018 05:01 PM
Last Updated : 13 Jan 2018 05:08 PM

ஐஸ் ஹவுஸில் பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை

முன் விரோதம் காரணமாக ஐஸ் ஹவுஸில் பட்டப்பகலில் நட்ட நடுச்சாலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருவல்லிக்கேணி, ராஜாஜி நகர் கஜபதி தெருவைச் சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது மகன் முனியன்(24). அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் இன்று மதியம் 3 மணி அளவில் பெசன்ட் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.


ராம்நகர் 8-வது தெரு அருகே வந்த போது இரண்டு நபர்கள் அவரது இரு சக்கர வாகனத்தை மறித்து அவரை கீழே தள்ளி சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் இடது மார்பு மற்றும் வலது கழுத்தில் பலத்த கத்திக்குத்து விழுந்ததால் படுகாயமடைந்த முனியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த கொலையைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். கொலையை செய்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கொலை குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐஸ் ஹவுஸ் போலீஸார் முனியன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் முனியனை கத்தியால் குத்திய இரண்டு நபர்களில் ஒருவன் ராம் நகர் 8-வது தெருவில் வசிக்கும் குப்புசாமி என்பவரின் மகன் சத்யா(எ) பாம்பே சத்யா(28) என்பது தெரிய வந்தது.

பாம்பே சத்யா மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் முனியாவை சத்யா கொலை செய்த காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை நடந்த பகுதியில் கிடைத்துள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x