Published : 01 Jan 2018 10:33 AM
Last Updated : 01 Jan 2018 10:33 AM

2,084 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அரசு பள்ளிகளில் காலி

பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவியில் 2,084 காலியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 5 ஆயிரத்து 919 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1.12.2017 நிலவரப்படி உள்ள காலியிடங்கள் குறித்த விவரங்களை டிசம்பர் 29-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவுசெய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கும் பள்ளிக்கல்வி இயக்கு நர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டிருந்தார்.

அந்த விவரங்களின் அடிப் படையில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி யில் மட்டும் 2,084 காலியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம் வருமாறு:

தமிழ் - 270

ஆங்கிலம் - 228

கணிதம் - 436

அறிவியல் - 696

சமூக அறிவியல் - 454

தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 31 ஆயிரத்து 393 அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளிலும் பட்டதாரி ஆசிரியர் பதவியில் கணிசமான எண்ணிக்கையில் காலியிடங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த காலியிடங்களில் 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x