விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்: சென்னையில் 25 இடங்களில் நடந்தது

சென்னை தியாகராய நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கோடம்பாக்கம் காமராஜர் காலனி 1-வது தெருவில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தொடங்கி வைத்தார். இதில் தென் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் தி.நகர் அப்புனு, நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated on
1 min read

சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் சென்னையில் 25 இடங்களில் நேற்று நடைபெற்றது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டார். அதன்படி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேற்று மருத்துவ முகாம் நடந்தது. தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடம்பாக்கம், காமராஜர் காலனியில் விஜய் மக்கள் இயக்க தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் தி.நகர் அப்புனு தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமை, விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்.

பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்ற இந்த மருத்துவ முகாமில், குழந்தைகள், பெண்கள், முதியோருக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதேபோல், பெரம்பூர், வியாசர்பாடி, கொடுங்கையூர், திருவிக நகர், கொளத்தூர், கொருக்குப்பேட்டை, தி.நகர் ஆனந்தன் தெரு, ஐந்து விளக்கு, பிருந்தாவன தெரு ஹவுசிங் போர்டு, வடபழனி, அசோக்நகர், நல்லாங்குப்பம், ஜாபர்கான்பேட்டை, பனகல் மாளிகை, வில்லிவாக்கம், அயனாவரம் உட்பட 25 இடங்களில் அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in