அமைச்சர்களுக்கு எதிரான மறுஆய்வு வழக்குகளில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? - தலைமைப் பதிவாளர் பதில்தர உத்தரவு

அமைச்சர்களுக்கு எதிரான மறுஆய்வு வழக்குகளில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? - தலைமைப் பதிவாளர் பதில்தர உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து தற்போதைய அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி ஆகியோரையும், முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோரை விடுவித்தும், விடுதலை செய்தும் கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தது.

இதில் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பொன்முடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் தானும் சேர்க்கப்பட்டுள்ளதால் தனது தரப்பு வாதத்தை முன்வைக்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, ‘‘இவ்வாறு தாமாக முன்வந்து வழக்குகளை மறுஆய்வு செய்ய ஏராளமான நடைமுறைகள் உள்ளன. எனவே, பொன்முடிக்கு எதிரான வழக்கில் மட்டுமல்ல இதுதொடர்பாக இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள மறுஆய்வு வழக்குகளில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து தலைமைப் பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜன.8-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in